Perambalur: Dispute at TASMAC liquor bar; 3 arrested!
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் கிராமத்தில் தெரணி செல்லும் சாலையில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபான கடையின் பார் உள்ளது. கடந்த நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் பணம் கொடுக்காமல் மதுபானம் மற்றும் தின்பண்டங்கள் கேட்டு அங்கு பணியாற்றிய ஊழியரிடம் 3 பேர் தகராறு செய்தனர். மேலும், ஆபாச வார்த்தைகளில் பேசி ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பார் உரிமையாளர் ராஜேந்திரன், கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி, தகராறு செய்த அதே கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் நந்தகுமார் (26), முருகேசன் மகன் சூரியபிரகாஷ் (27), சுப்பிரமணி மகன் பிரபு (40), ஆகியோரை கைது செய்தனர். பின்னர் , அவர்கள் மூன்று பேரையும், பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.