Perambalur District, 2.30 Lakh National Flag Flags have been distributed to celebrate Independence Day : Collector Information!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

இந்திய திருநாட்டின் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவினை சிறப்பாக கொண்டாடும் வகையில் வீடுகள் தோறும் தேசிய கொடியினை ஏற்றுவதற்காக மாவட்டத்தில் உள்ள வீடுகளுக்கு 1.98 லட்சம் அளவிலான கொடிகளும், அனைத்து பொது இடங்களிலும் தேசியக் கொடிகளை ஏற்றுவதற்காக சுமார் 32,000 கொடிகள் வழங்கப்பட்டுள்ளது.

ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 39,681 தேசிய கொடிகளும்,பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 35,301 தேசிய கொடிகளும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 37,256 தேசிய கொடிகளும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 48,436 தேசிய கொடிகளும், லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் 3,400 தேசிய கொடிகளும், குரும்பலூர் பேரூராட்சியில் 3,694 தேசிய கொடிகளும், அரும்பாவூர் பேரூராட்சியில் 4,100 தேசிய கொடிகளும், பூலாம்பாடி பேரூராட்சியில் 3,216 தேசிய கொடிகளும்,பெரம்பலூர் நகராட்சியில் 14,706 தேசிய கொடிகளும் என மொத்தம் 1,89,790 தேசிய கொடிகள் வீடுகளில் மட்டும் ஏற்றுவதற்காக வழங்கப்பட்டுள்ளது. மேலும் வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், அரசு துறை சார்ந்த அலுவலகங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஏற்றுவதற்காக என மொத்தம் 2.30 லட்சம் தேசிய கொடிகள் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று காலை பெரம்பலூர் கலெக்டர், டி.ஆர்.ஓ, போலீஸ் எஸ்.பி அலுவலகங்களிலும், அரசு அலுவலர்கள் இல்லங்களில், அலுவலகங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டது. .

கிராம பகுதியில் தலைமையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தேசியக் கொடிகளை ஏற்றுகின்றனர்.

வணிக நிறுவனங்கள் , சிறு,குறு தொழிற்சாலைகளில், ஆங்காங்கே தேசிய கொடியினை ஏற்றி வருகின்றனர். இதுவரை வழங்கப்பட்ட கொடிகளில் 80 சதவீத கொடிகள் ஏற்றப்பட்டுள்ளது. அரசு, தனியார் பள்ளி கல்லூரிகளிலும் சுதந்திரத்திருநாள் கொண்டாட்டங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றது.

இன்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு இந்தியத் திருநாட்டின் சுதந்திர நாளை கோலாகலமாக கொண்டாட வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!