Perambalur District Collector V.Santha Appreciate to Malaysian businessman Dato.Pragadheeskumar
பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா பேசியதாவது:
நானும் அரசு பள்ளியில் படித்துதான் முன்னேறி உள்ளேன். எனது ரோல்மாடலாக எனது ஆசிரியர்களைத்தான் எடுத்துக் கொண்டேன். நான் இந்த பெற்றோர் ஆசிரியர் கழக ஆலோசனை கூட்டத்தில் கூட கலந்து கொள்ள, இந்த பள்ளியில் படித்து உலகம் முழுவதும் வாணிகம் செய்து கொண்டிருக்கும் டத்தோ.பிரகதீஸ்குமாரும் ஒரு காரணம். அவர் பள்ளியில் படித்த போது சுமார் 2500 பேர் இருந்தாகவும், தற்போது 400 மாணவர்கள் படிப்பதாகவும் தெரிவித்து வருத்தப்பட்டதோடு, சரிசெய்யவும், மாணவர்களுக்கு எந்த பிரதி பலனை பாராமல் உதவி செய்ய வந்திருப்பதை பாராட்டுகிறேன். உலகம முழுவதும் வர்த்தகம் இருக்கும் அவர் பல்வேறு கடுமையான வேலைப்பளுவிற்கும் இடையே தான் பிறந்த ஊரும், மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என நேரம் ஒதுக்கி உங்களுடன் உரையாடுவதை பாராட்டுகிறேன் என்றும், அவர் இந்த பள்ளியில் மாணவர்கள் கூடுதல் சேர்க்கை நடைபெறவும், கல்வி பயிலும் மாணவர்களின் தரத்தை உயர்த்தவும் அரசு சார்பில் அனைத்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இவரை மாணவர்கள் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளலாம். அரசு பள்ளியில் பயிலும், மாணவர்கள் முதலில் புரிந்து கொள்ள சிரமப்பட்டாலும், பின்னர் பெரிய அளவில், விஞ்ஞானி சக்திசிவன் போன்று வருவார்கள் என்றும், தமிழ் படித்தவர்கள் அதிக அளவில் சாதித்துள்ளனர் என்றும் பேசினார்.
முன்னதாக பேசிய, டத்தோ.பிரகதீஸ்குமார் ( DATO. S. PRAKADEESH KUMAR MD., PLUS MAX Group of Companies), மாணவர்கள் மற்றும் பள்ளி வளர்ச்சிக்காக தன்னால் முடிந்த உதவிகளை செய்வதாக தெரிவித்தார். அரசுப் பள்ளியில் பயின்றே சிறந்த தொழிலதிபராக மாறியதையும் எடுத்துரைத்தார். பள்ளியில் நன்கு பயிலும் மாணவிகளுக்கு பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. பெற்றோர்கள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். இந்நிகழ்வில் பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள், ஊரக வளர்ச்சி துறை, வருவாய்த்துறை அதிகாரிகள், வட்டார கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.