Perambalur District Deeds Registrar’s Office: Chief Minister MK Stalin opens on video !

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக, பெரம்பலூர் மாவட்டத்திற்கான புதிய மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கலெக்டர் வெங்கடபிரியா குத்து விளக்கேற்றி பணிகளை தொடங்கி வைத்தார்.

அரசாணை நிலை எண் 38, வணிக வரி மற்றும் பதிவுத்துறை, நாள் 08.03.2022-ன்படி, அரியலூர் பதிவு மாவட்டத்திலிருந்து, புதியதாக பெரம்பலூர் பதிவு மாவட்டம் தோற்றிவிக்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் புதிய மாவட்ட பதிவாளர் அலுவலகம், கொளக்காநத்தம் பகுதியில் புதிய சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றினை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட பதிவாளர் அலுவலகமானது மாவட்ட பதிவாளர் நிர்வாகம் மற்றும் மாவட்ட பதிவாளர் தணிக்கை சார்பதிவாளர் நிர்வாகம், சார்பதிவாளர் வழிகாட்டி, சார்பதிவாளர் சீட்டு மற்றும் சங்கம் போன்றவைகளுடன் செயல்பட உள்ளது.

இந்த அலுவலகம், பெரம்பலூர் இணை சார்பதிவாளர் அலுவலகம், செட்டிக்குளம் சார்பதிவாளர் அலுவலகம், வாலிகண்டபுரம் சார்பதிவாளர் அலுவலகம், வேப்பூர் சார்பதிவாளர் அலுவலகம், வேப்பந்தட்டை சார்பதிவாளர் அலுவலகம், கொளக்காநத்தம் சார்பதிவாளர் அலுவலகம் என 6 துணை பதிவாளர் அலுவலகங்களை உள்ளடக்கியதாகும்.

பெரம்பலூர் நகராட்சித் தலைவர் அம்பிகாராஜேந்திரன், திருச்சி மண்டல துணை பதிவுத் துறை தலைவர் லதா, மாவட்ட பதிவாளர் நிர்வாகம் பா. உஷா ராணி, பெரம்பலூர் நீர் இணை சார்பதிவாளர் மு. கோகுலமுருகபூபதி, நகராட்சி துணை தலைவர் ஹரிபாஸ்கர், யூனியன் சேர்மன்கள் மீனாஅண்ணாதுரை (பெரம்பலூர்), க. ராமலிங்கம் (வேப்பந்தட்டை), பேரூராட்சி தலைவர்கள் சங்கீதா ரமேஷ் (குரும்பலூர்), பாக்கியலெட்சுமி செங்குட்டுவன் (பூலாம்பாடி) உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!