Perambalur District DMK’s Anna Arivagam was inaugurated by Minister S.S. Sivashankar!
பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் அண்ணா அறிவகம், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. அதனை, தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் திறந்து வைத்தார். மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், குன்னம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் ஏ.கே.அருண், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ரமேஷ் ராஜேந்திரன், ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ துரைசாமி, மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர் உள்ளிட்ட மாநில, மாவட்ட,ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளனர்.