Perambalur District-level sports competition for Chief Minister’s Cup: Collector

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :

2017-2018-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான தடகளம், நீச்சல், மற்றும் குழு போட்டிகள் இருபாலருக்கும் 28.11.2017 முதல் 30.11.2017 வரை பெரம்பலூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில், மேற்குறிப்பிட்ட தினங்களில் காலை 9.00 மணிமுதல் நடத்தப்பட உள்ளது.

28.11.2017 அன்று தடகளம், கபடி, கையுந்துபந்து, இறகுப்பந்து, நீச்சல் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் இருபாலருக்கும் நடத்தப்பட உள்ளது.

தடகள போட்டிகளின் விபரம் :

100 மீ, 800மீ, 5000 மீ, 110மீ தடை தாண்டுதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகள் ஆண்களுக்கு நடைபெறும்.

பெண்களுக்கான தடகள போட்டிகள் :

100 மீ, 400மீ, 3000 மீ, 100மீ தடைதாண்டும் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகள் ஆகிய போட்டிகள் நடைபெறும்.

நீச்சல் போட்டிகள் விவரம் :
50மீ, 100மீ, 200மீ, 400மீ, பிரீ ஸ்டைல், 50மீ பேக் ஸ்ட்ரோக், 50மீ பிரஸ்ட் ஸ்ட்ரோக், 50மீ பட்டர்ர்பிளை ஸ்ட்ரோக், 200மீ இன்டிவிஜுவல் மிட்லே ஆகிய போட்டிகள் இருபாலருக்கும் நடைபெற உள்ளது.

29.11.2017 அன்று கால்பந்து, கூடைப்பந்து, மேசைப்பந்து ஆகிய விளையாட்டு போட்டிகள் இருபாலருக்கும் நடைபெற உள்ளது. இதில் மேசைப்பந்து, இறகுப்பந்து விளையாட்டுப் போட்டிகள் இரண்டு ஒற்றையர்ர் மற்றும் ஒரு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் நடைபெற உள்ளது.

30.11.2017 அன்று வளைகோல்பந்து,டென்னிஸ் ஆகிய போட்டிகள் இருபாலருக்கும் நடைபெற உள்ளது. குழு போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் கம் லீக் முறையில் நடத்தப்பட உள்ளது.

இப்போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் 31.12.2017 அன்று 21 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். (01.01.1997 அன்றோ அல்லது அதற்கு பின்னா; பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும்.) பிறந்த தேதிக்கான சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மாவட்ட அளவிலான குழுப்போட்டிகளில் தேர்ர்வு செய்யப்படுபவர்கள் தமிழ்நாட்டில் குறைந்தது 5 வருடங்களாவது வசித்து வருவதற்கான புகைப்படத்துடன் கூடிய குடும்ப அடையாள அட்டை , வாக்காளர் அட்டை, ஓட்டுநர்ர் உரிமம், பள்ளி மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் இவைகளில் ஏதேனும் ஒன்றை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் போட்டியில் கலந்து கொள்ளும் முன் சமர்பிக்கப்பட வேண்டும்.

மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் சொந்த மாவட்டத்திற்காகவோ, பணிபுரியும் மாவட்டத்திற்காகவோ, பள்ளி, கல்யிலூரியில் படிக்கும் மாவட்டத்திற்காகவோ விளையாட அனுமதிக்கப்படுவர். அதற்குரிய ஆதாரங்கள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் சமர்பிக்கப்பட வேண்டும்.

மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி முதல் இடம் பெறும் வீரர்ர்கள் மற்றும் வீராங்கனைகள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இதில் எவ்வித மாற்றமும் செய்ய இயலாது. எக்காரணம் கொண்டும் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்காமல் மாநில அளவிலான போட்டிகளில் நேரடியாக கலந்து கொள்ள இயலாது.

தனித்திறன் போட்டிகளில் ஒருவா; ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள இயலும்.

போட்டிகளில் வெற்றி பெறும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு முதல் பரிசு ரூ.1000-ம், இரண்டாம் பரிசு ரூ.750-ம், மூன்றாம் பரிசு ரூ.500-ம் வழங்கப்படும். பரிசுத் தொகையினை வங்கியில் நேரடி பரிவர்த்தனை மூலம் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும். எனவே, போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைவரும் அவசியம் வங்கி கணக்கு புத்தக நகலினை சமர்பிக்கப்பட வேண்டும்.

போட்டிகளில் கலந்து கொள்ள வரும் வீரர் – வீராங்கணைகள் கட்டாயம் மேற்சொன்ன சான்றிதழ்களுடன் வரவும். சான்றிதழ்கள் சமர்பிக்கப்படாதவர்கள் போட்டியில் கலந்து கொள்ள கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான தனிநபர் மற்றும் குழுப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெறும் அணிவீரர் மற்றும் வீராங்கணைகளுக்கு தலா ரூ.1- இலட்சம், ரூ.75,000- ரூ.50,000- மும் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.

எனவே, மாவட்ட அளவிலான போட்டிகளில் அதிக அளவில் வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!