Perambalur District, Special Summary Amendment Draft Voter List for 2022 Released!
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு சுருக்கத் திருத்த பணி 2022ன் தொடர்ச்சியாக வரைவு வாக்காளர் பட்டியலினை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், கலெக்டர் வெங்கடபிரியா வெளியிட்டார். அவர் அப்போது, தெரிவித்தாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் 19.03.2021 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 147. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 3,02,692 வாக்காளர்களும், 148. குன்னம் சட்டமன்ற தொகுதியில் 2,73,461 வாக்காளர்களும் ஆக மொத்தம் 5,76,153 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.
அதன் பின்னர் நடைபெற்ற தொடர் திருத்த பணியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பாக பெறப்பட்ட படிவங்களின் பேரில் 147. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 223 ஆண் வாக்காளர்களும், 291 பெண் வாக்காளர்களும் மற்றும் 148.குன்னம் சட்டமன்ற தொகுதியில் 215 ஆண் வாக்களர்களும், 251 பெண் வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இறப்பு, இரட்டை பதிவு மற்றும் இடப்பெயற்சி காரணமாக 147. பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 1358 ஆண் வாக்காளர்களும், 1053 பெண் வாக்காளர்களும், மற்றும் 148. குன்னம் சட்டமன்ற தொகுதியில் 1277 ஆண் வாக்காளர்களும், 830 பெண் வாக்களர்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது வெளியிடப்படுகின்ற வரைவு வாக்காளர் பட்டியலின் படி 147. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் தற்போது 332 வாக்குச்சாவடிகளும், 148. குன்னம் சட்டமன்ற தொகுதியில் 320 வாக்குச்சாவடிகளும், ஆக மொத்தம் 652 வாக்குச்சாவடிகள் உள்ளன.
147. பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 332 வாக்கு சாவடிகளில் மொத்தம் 3,00,795 வாக்களர்கள் உள்ளனர். இதில்; 1,46,299 ஆண் வாக்காளர்களும், 1,54,474 பெண் வாக்காளர்களும், 22 இதர வாக்காளர்களும் உள்ளனர். 148. குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 320 வாக்கு சாவடிகளில் மொத்தம் 2,71,820 வாக்காளர்கள் உள்ளனர். இதில்; 1,34,035 ஆண் வாக்காளர்களும், 1,37,772 பெண் வாக்காளர்களும், 13 இதர வாக்காளர்களும் உள்ளனர். ஆக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 5,72,615 வாக்காளர்கள் உள்ளனர். இதில்; 2,80,334 ஆண் வாக்காளர்களும், 2,92,246 பெண் வாக்காளர்களும், 35 இதர வாக்காளர்களும் உள்ளனர்.
அதனடிப்படையில் இன்று (01.11.2021) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இது தொடர்பாக அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தங்களது கூற்று மற்றும் ஆட்சேபனையை 30.11.2021க்குள் வாக்காளர் பதிவு அலுவலர் ஃவருவாய் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஃ மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம்.
மேலும் இந்திய தேர்தல் ஆணையம் 01.01.2022-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளவும் 01.11.2021 முதல் 30.11.2021 வரை விண்ணப்பங்கள் பெற ஆணையிட்டுள்ளது.
அதன்பேரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிக்காக சிறப்பு முகாம்கள் 13.11.2021 (சனி), 14.11.2021 (ஞாயிறு), 27.11.2021 (சனி), மற்றும் 28.11.2021 (ஞாயிறு) ஆகிய நாட்களில் சம்மந்தப்பட்ட வாக்குசாவடி மையங்களில் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாம்களின்போது பெறப்படும் அனைத்து வகையான படிவங்களும் பரிசீலனை செய்யப்பட்டு 05.01.2022 (புதன்) அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, 01.01.2022 அன்று 18 வயது பூர்த்தியடையும் அனைத்து தகுதியுள்ள நபர்களும் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் மற்றும் பெயர் நீக்கல் போன்றவற்றிற்கான விண்ணப்பங்களை சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளித்து பயன்பெறலாம் என தெரிவித்தார். இந்நிகழ்வில் அரசியல் கட்சியினர், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.