Perambalur: Diwali festival; Police helpline for the public; SP inaugurated!
பெரம்பலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பாகவும் குற்றம் நடைபெறுவதை தவிர்க்கும்பொருட்டு காவல்துறையினரை உடனடியாக தொடர்புகொள்வதற்காக கடைவீதியில் உள்ள போக்குவரத்து காவல் பிரிவு நிலையத்தில், காவல் உதவி மையத்தை போலீஸ் எஸ்.பி., ஆதர்ஷ் பசேரா திறந்து வைத்தார்.
இந்த காவல் உதவி மையத்தின் மூலம் பொதுமக்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள், பெண்கள் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான உதவிகளை பெறலாம். மேலும், போக்குவரத்து நெரிசல் அதிகமான இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பழைய பேருந்து நிலையம், கடைவீதி போன்ற இடங்களில் பயணிக்கும் பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனை மற்றும் இடையூறுகளை தெரிவிக்கும் வகையில் பெரம்பலூர் ஊர்க்காவல்படை அலுவலகத்தின் (பழைய காவல்நிலையம் ) முன்பு காவல் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
பெண்கள் 181, குழந்தைகள் 1098, போலீஸ் 100, சைபர் க்ரைம் 1930, முதியோர்கள் 14567 என்ற எண்களிலும், கூடுதல் உதவிக்கு எஸ்.பி 8826249399, ஏ. எஸ்.பி 9942944442, டவுன் இன்ஸ்பெக்டர் 7358810119, டவுன் டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் 9498159402, ஹைவே டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் 9943514304, தனிப்பிரிவு ஆபீஸ் 9438100690, கன்ட்ரோல் ரூம் 9498181225, தீயணைப்பு நிலைய அதிகாரி 9943360656 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், நகரம் முழுவதும் 5 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்துள்ள போலீசார், போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
பெரம்பலூர் போலீஸ் டி.எஸ்.பி ஆரோக்யராஜ், பெரம்பலூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு, ஹைவே டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிள்ளிவளவன், பெரம்பலூர் டவுன் டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள், ஊர்க்காவல்படையினர் பலர் உடனிருந்தனர்.