Information from Malarvizhi Mahendran, a gynecologist and obstetrician at Ramasamy Hospital, Perambalur, who provides solutions to infertility and PCOD!

பெரம்பலூர் பாலக்கரை அருகே உள்ள இராமசாமி மருத்துவமனையின் மகளிர் மற்றும் மகப்பேறு சிறப்பு மருத்துவரும், குழந்தையின்மைக்கான சிகிச்சை நிபுணருமான மலர்விழி மகேந்திரன் தெரிவித்தாவது:

குழந்தையின்மையும், PCODயும் தற்போது, முந்தைய காலத்தை விட அதிகமாக தென்படுகிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. அண்மை வருடங்களில், பெண்கள் திருமணம் செய்து கொள்ளும் வயது முன்பை விட அதிகமாகி விட்டது. அது மட்டுமில்லாமல், தற்போதுள்ள உணவு பழக்க வழக்கங்களினால் பெண்கள் மற்றும் ஆண்கள் இருபாலரும் பிரச்சனைக்கு உள்ளாகின்றனர். இதனால், இல்லற வாழ்வில் குழந்தையின்மை அதிகமாக தென்படுகிறது. மிகவும் அதிகமாக பெண்களிடம் தென்படும் நோய்களில் மாதவிடாய் காலத்தில் ஹார்மோன் குறைபாடுகளால் ஏற்படும் பிசிஓடி-யும் ஒன்றாக உள்ளது.

முதலில் (PCOD) பிசிஓடி என்றால் பாலிசிஸ்டிக் ஓவேரியன் சின்ட்ரோம். பெண்களுக்கு இரண்டு சினை முட்டை பைகள் அதாவது ஓவரிகள் உண்டு. அவற்றில் சில ஆயிரக்கணக்கான முட்டைகள் உண்டு. மாதம் ஒருமுறை அந்த முட்டைகள் வளர்ந்து வெடிக்கும். இந்த பிசிஓடி-யில் இந்த முட்டைகள் முழுமையாக வளராது இதனால், அவர்களுக்கு மாதவிடாயும் ஒழுங்காக இருக்காது. பிற்காலத்தில், திருமணமான பின் குழந்தை பேறில் பிரச்சனை ஏற்படலாம். கர்ப்பமாவதிலும் பிரச்சனை ஏற்படலாம். பிசிஓடி குறைபாடு இருப்பவர்களுக்கு மாதாமாதம் சரியாக முட்டைகள் வளராது, சிலருக்கு வளரவே வளராது. சிலருக்கு நாட்கள் தாண்டி வரும். சிலருக்கு வளர்ந்த முட்டை பலமாக இருக்காது. இதனால், அவர்களுக்கு மாதவிடாய் தள்ளிப் போகும் இரண்டு மாதம், மூன்று மாதம் கழித்து கூட வரலாம். உடல் எடை அதிகமாகும். தேவையில்லாத இடங்களில் மீசை, பிறகு தாடைகளில் முடி வளரலாம் அல்லது முடி கொட்டலாம். தலையில் உள்ள முடிகள் கூட கொட்டும். முகத்தில் முகப்பருக்கள் அதிகமாகலாம், கழுத்தில் கருப்பு அடித்தது போல் ஆகலாம், இப்பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த மாதிரி அறிகுறிகள் காணப்படும். இவை அனைத்தும் பெண்கள் உடம்பில் டெஸ்டோஸ்டிரோஜன் அளவு அதிகமாவதால் ஏற்படும் பிரச்சனை.

இப்பொழுது எதனால் பிசிஓடி ஏற்படுகிறது என்பதை பார்க்கலாம். மரபணு காரணங்களால் அம்மாவிற்கு இப்பிரச்சனை இருந்தால், அடுத்த தலைமுறை பெண்ணிற்கும் கரு தரிப்பதற்கு முன் அதிகமாக இந்த பிசிஓடி பிரச்சனை வர வாய்ப்புள்ளது. அடுத்து நம்முடைய பழக்க வழக்கங்கள், உணவு முறைகள், தூக்கம், நடைப்பயிற்சி, உடற்பயிற்சி இவற்றை பொருத்தும் மாறி வரலாம். அதிகமாக மாவுச்சத்து, இனிப்பு பொருட்கள் எடுத்துக் கொள்பவர்கள் ஜங்க் ஃபுட் அதாவது பிஸ்கட், சாக்லேட், நூடுல்ஸ் இந்த மாதிரி அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்பவர்களுக்கும், முறையான தூக்கமின்மை, ஐடி துறையில் தூங்காமல் இரவு பணி பார்ப்பவர்களுக்கும், சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளாமல் இருப்பது, எடை அதிகமாக இருப்பது, sedentary லைப் ஸ்டைல் அதாவது உடற்பயிற்சி இல்லாமல் உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்வதாலும் பிசிஓடி வரலாம்.

இந்த பிரச்சனை இருப்பவர்களுக்கு என்னென்ன மாதிரி அறிகுறிகள் இருக்கும் என்பதை நாம் முதலே பார்த்தோம். மீண்டும் தெரிவிப்பதாவது, மாதவிடாய் மாதாமாதம் ஒழுங்காக வராது. சிலருக்கு வந்தாலும் உதிரப்போக்கு மிகவும் கம்மியாக இருக்கும். திருமணம் ஆகி இருந்தால் குழந்தையின்மை பிரச்சனை இருக்கலாம் அதிக எடை இருக்கலாம் கழுத்தில் கருப்பாக இருக்கலாம் தேவையில்லாத இடத்தில் முடிகள் வளரலாம், தலைமுடி கூட கொட்டலாம். மிகவும் சோம்பல், அசதியாக கூட இருக்கும்.

இதை கண்டுபிடிக்க ஸ்கேன் மற்றும் சில ரத்த டெஸ்ட்களும் உள்ளது. இப்பிரச்சனையை சரி செய்யக் கூடிய ஒன்றுதான். மருந்து, மாத்திரைகள் எடுத்து குணப்படுத்தி கொள்ளலாம். ஆனால், என்னிடம் பிசிஓடி உடன் வருபவர்களிடம் நான் சொல்ற ஆலோசனை முதலில்வாழ்க்கை முறையிலும், உணவு பழக்க வழக்கங்களையும் மாற்ற வேண்டும். முதலில் மாத்திரை மருந்துகள் எடுத்துக் கொள்ளும் போது சுமார் 50 சதவீதமாக முன்னேற்றம் இருந்தாலும், முழுமையான மாற்றம் பெற வாழ்வியல் முறைகள் மாற்றத்தில் மட்டும்தான் கிடைக்கும். அதாவது, சரியாக நேரங்களில் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். உண்ணும் உணவில் அதிகம் காய்கறிகள் பழங்கள் அதிக புரத சத்து உள்ள மீன் முட்டை போன்று உணவுகள் எடுக்க வேண்டும். அரிசி, கோதுமை, இட்லி, தோசை குறைந்த அளவிலும் இருக்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை அறவே சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். டீயில் பிஸ்கட் நனைத்து சாப்பிவது, சாக்லேட் சாப்பிடுவது போன்று துரித உணவு வகைகளையும், ஐஸ்கிரீம், நூடுல்ஸ் மற்றும் பாஸ்ட்புட் உணவு வகைகளான ஷவர்மா, சிக்கன் ரைஸ் மாதிரியான உணவுகளையும் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

கடைகளில் வாங்கி சாப்பிடுவதை முழுமையாக தவிர்க்க வேண்டும். அதிக எடை இருப்பவர்கள் உடல் எடையை குறைக்க வேண்டும். காம்பினேஷன் ஆஃப் டயட் மற்றும் உடற்பயிற்சிகள் மூலம் உடல் எடையை குறைக்க வேண்டும். தினமும் நடைப்பயிற்சியை தொடர்ந்து செய்து வர வேண்டும். இதனால் நல்ல மாற்றம் தெரியும். பிசிஓடி இருப்பதினால் எதிர்காலங்களில் நீரழிவு நோய் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகள் வரும் வாய்ப்பு உள்ளது.

10 வருடங்களுக்கு முன்பை விட தற்போது இந்த பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்கள் இரண்டு, மூன்று மடங்குகள் அதிகமாகி உள்ளனர். பருவ வயதில் பள்ளிகளில் காலக்கட்டங்களிலேயே விழிப்புணர்வை தெரிந்து கொண்டு எடுத்துரைக்க வேண்டும். பல குழந்தைகள் உடல் எடை அதிமாகி கழுத்தில் கருப்பாகவும் இருப்பதை காண முடிகிறது.

இதனால், பெற்றோர்களும் குழந்தைகளும் என்ன உணவு முறைகளை எடுத்துக் கொள்கிறோம், என்ன சாப்பிட குழந்தைகளுக்கு கொடுக்கிறோம் என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. இந்த பிசிஓடியை பத்தி தெரிந்துகொண்டு அது வராமல் தடுக்க ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளை பாதுகாக்க முடியுமானால் அதுவே கட்டுரை மூலம் எங்களுக்கு கிடைத்த பெரிய வெற்றி என கருதுவதாக மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் மலர்விழி மகேந்திரன் தெரிவித்தார்.

Doctor Malarvizhi Mahendran, a Gynecologist and Obstetrician at Ramasamy Hospital, Perambalur, Solutions to infertility and PCOD!


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!