Perambalur: Examination for postgraduate teachers; Collector inspects!
பெரம்பலூர்: முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு இன்று மாநிலம் முழுவதும் நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் 16 தேர்வு மையங்களில் 56 மாற்றுத்திறனாளிகள் உட்பட மொத்தம் 4,528 நபர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 4,280 நபர்கள் தேர்வு எழுதினர்.
மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியில் நடந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு மையத்தை பார்வையிட்ட கலெக்டர், தேர்வர்கள் முறையான நுழைவுச்சீட்டு, அடையாள அட்டை வைத்துள்ளார்களா என்றும், தேர்வு மையத்தில் போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா என்றும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்றும் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது ஆலத்தூர் தாசில்தார் முத்துக்குமரன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.