Perambalur: Former school student and Almighty School Chairman A. Ramkumar provided uniforms to Siruvachur Government School students at his own expense!
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 200 மாணவ மாணவியர்களுக்கு, பள்ளியின் முன்னாள் மாணவரும், ஆல்மைட்டி வித்யாலயா பள்ளியின் சேர்மனுமான ஆ.ராம்குமார் அவருடைய சொந்த நிதியிலிருந்து பள்ளி சீருடைகள் வழங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ம.செல்வகுமார், தனியார் பள்ளிகள் மாவட்டக் கல்வி அலுவலர் லதா கலந்து கொண்டு மாணவர்களுக்கு சீருடை வழங்கினர். மேலும் கொடையாளர் ராம்குமாரை பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினர் மற்றும் முன்னாள் ஊராட்சித் துணைத் தலைவர் ரெங்கநாதன் உள்பட பலர் உடனிருந்தனர்.