Perambalur: Four killed as a car hits devotees! Demand for a ban on walking pilgrimages at night!

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகேயுள்ள தொளார்க்குடிகாடு கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் 65 பேர் மாலை அணிந்து சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றனர். இதேபோல, சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த பக்தர்களும் பாதயாத்திரையாக நடந்து சென்றனர். இவர்கள் இன்று காலை 5 மணி அளவில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரை கடந்து சமயபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் ஒன்று பாதையை யாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் புகுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள தொளார்க்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி மலர்க்கொடி (35), சுப்பிரமணி மனைவி விஜயலட்சுமி (40) சசிகலா(47) மற்றும் சேலம் மாவட்டம் கெங்கவல்லியைச் சேர்ந்த மருதமுத்து மனைவி சித்ரா (40) திருநாவுக்கரசு மனைவி சசிகலா (47) ஆகிய 4 பக்தர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தொளார்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் மனைவி ஜோதிலட்சுமி (57) என்பவர் காயங்களுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன் கார் ஓட்டுநரான சென்னை, திரிசூலம், ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த கவுதம் (24) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் உடல்களும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். இன்று அதிகாலை நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தடை விதிக்க கோரிக்கை!
இந்து மதம் மட்டுமல்லாது பிற மதத்தினர்களும் மாலை அணிந்து பாதயாத்திரையாக பல புனித தலங்களுக்கு செல்கின்றனர். இவர்கள் சாலையில் பகலில் ஓராமாக சென்றாலும், சாலையில் இரவில் பாம்பு, பூச்சிகளுக்கு பயந்து சாலையில் செல்லும் போது எதிர் வரும் வாகனங்களின் முகப்பு விளக்குகளின் எதிர் வெளிச்சத்தால், இரவில் செல்லும் வாகனங்கள் மோதி பலர் விபத்திற்கு உள்ளாகின்றனர். இதனால், பல குடும்பங்கள் நிற்கதியாக நிற்கின்றன. எனவே, பாதயாத்திரை செல்லும் அனைத்து மத பக்தர்களுக்கும் இரவில் சாலைகளில் அரசு செல்ல தடைவிதிக்க வேண்டும் என சமூக ஆர்வர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497