Perambalur: Free computer accountant training!
பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் கணினி கணக்கியல் வரும் 25.08.2025 ஆம் தேதி முதல் இலவசமாக அளிக்கப்பட உள்ளது.38 நாட்கள், காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் இப்பயிற்சி காலத்தில் மதிய உணவு மற்றும் காலை, மாலை தேனீர் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படுவதுடன், வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.
இப்பயிற்சியில் சேர 19 வயது முதல் 45 வயதுக்குபட்ட, எழுத படிக்க தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும், மேலும், வறுமை கோட்டு எண் அல்லது இலக்கு எண் (PIP) அல்லது AAY / PHH – குடும்ப அட்டை எண் அல்லது குடும்பத்தில் எவரேனும் 100 நாள் வேலை அட்டை உள்ள கிராமப்புற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விருப்பம் உள்ளவர்கள், பயிற்சி மையத்தில் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, ஆதார் கார்டு, பெற்றோரின் 100 நாள் வேலை அட்டை, பான்கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் அளவு போட்டோ, ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து 23.08.2025 ஆம்தேதி மாலை 5மணிக்குள் அலுவலகத்தில் நேரில் வந்து பதிவு செய்யவும். பின்பு, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கு பெற்று பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும் என்றும், மேலும் விவரங்களுக்கு நேரிலோ அல்லது 04328-277896, 84890 65899, 94888 40328 தொலைப்பேசிகள் மூலமாக தொடர்பு கொள்ளலாம் என அம்மையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.