Perambalur: Free medical camp jointly organized by Nilan Diabetes Clinic and Aandavar Tiles; to be held tomorrow at Siruvachur!
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் மானிய தொடக்கப் பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 2மணி வரை பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடக்க உள்ளது. இதில், சர்க்கரை, ரத்த அழுத்தம் கண்டறிதல் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
இம்முகாமை பெரம்பலூர் மாவட்ட யூனியனை சேர்ந்த அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், சிறுவாச்சூர் ஆண்டவர் டைல்ஸ் ஷோரூம், சிறுவாச்சூர் மக்கள் மருந்தகம் மற்றும் பெரம்பலூர் நிலன் நீரிழிவு சிகிச்சையகம் இணைந்து நடத்துகிறது. நீரிழிவு (சர்க்கரை) நோய் நிபுணர்டாக்டர்.லக்ஷிகா. எஸ் நோயாளிகளை பரிசோதித்து, மருத்துவ ஆலோசனைகளை வழங்க உள்ளார். மேலும், சிறுவாச்சூர் மக்கள் மருந்தகம் சார்பில் இலவசமாக மருந்து மாத்திரைகளை வழங்கப்பட உள்ளது. முகாமிற்கான பிற ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட யூனியனை சேர்ந்த அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், சிறுவாச்சூர் ஆண்டவர் டைல்ஸ் ஷோரூமும் செய்து வருகிறது.