Perambalur: Free training for men in plumbing, sanitary work, welding, and house wiring!

பெரம்பலூர் மாவட்டத்தில் எளம்பலூர் சாலையில் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் ஆண்களுக்கான பிளம்பிங் சானிட்டரிங் ஒர்க் (Plumbing & Sanitary Works), வெல்டிங் பேப்ரிகேசன் (Welding and Fabrication) மற்றும் ஹவுஸ் வயரிங் (House Wiring) பயிற்சி சிறந்த வல்லுநர்களால் 90% தீவிர செயல் முறை பயிற்சியுடன் இலவசமாக கற்றுத் தரப்பட இருக்கின்றது.
30 நாட்கள் இப்பயிற்சி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். பயிற்சி காலத்தில், பயிற்ச்சிக்கான உபகரணங்கள் , சீருடை, புத்தகங்கள், மதிய உணவு மற்றும் காலை, மாலை தேனீர் இலவசமாக வழங்கப்படும். மேலும் நவீன தொழில்நுட்ப, உற்பத்தி பெருக்கம், விற்பனை செய்தல், தொழில் துவங்க, வங்கி கடனுதவி பெற ஆலோசனைகள் வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும் மற்றும் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.
இப்பயிற்சியில் சேர 19 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட,எழுத படிக்க தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும். மேலும் குடும்பத்தில் எவரேனும் ஏரி வேலை அட்டை (MNREGA) அல்லது குடும்ப அட்டை எண் AAY or PHH-AAY அல்லது வறுமை கோட்டு எண் (BPL) அல்லது இலக்கு எண் (PIP) உள்ள கிராமப்புற ஆண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விருப்பம் உள்ளவர்கள் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குனரிடம் தங்களது ஆதார் கார்டு, குடும்ப அட்டை, 100 நாள் வேலை அட்டை, வங்கி புத்தகம், சாதிச்சான்றிதழ், பான் கார்டு ஆகியவற்றின் நகல், 3 பாஸ் போர்ட் சைஸ் ஃபோட்டோ உடன் நேரில் வந்து 28-11-2025 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்யவும், பின்பு சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கு பெற்று பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு 8489065899, 9488840328 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.










kaalaimalar2@gmail.com |
9003770497