Perambalur: FSSAI officials seize around 63 kg of banned gutka products and impose fines!

பெரம்பலூர் மாவட்டத்தில், உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சுகுந்தன் தலைமையில் இன்று குன்னம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அல்லிநகரம் பகுதியிலுள்ள மகாராஜா பெட்டிக்கடை, மகாராஜா ஹோட்டல், செஞ்சேரி கண்ணன், சரஸ்வதி பெட்டிக்கடை ஆகிய 4 கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட உணவு கலந்த நிக்கோட்டின் புகையிலைப் பொருட்களான ஹான்ஸ், கூலிப் போன்ற பொருட்கள் சுமார் 63 கிலோ பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டு அதனை பறிமுதல் செய்து, கடைகள் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களால் மூடப்பட்டு, ரூ.1,75,000 அபராதம் விதிக்கப்பட்டடது.

புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாகவோ அல்லது TN DRUG FREE App என்ற செயலி மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் பொதுமக்களிடையே வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அழகுவேல், கதிரவன், சின்னமுத்து, விக்னேஷ், புவனா ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!