Perambalur: Gokula People’s Party appoints new district administrators!
பெரம்பலூர்: கோகுல மக்கள் கட்சியின் மாநில செயலாளராக ஸ்ரீஅம்மன் பேங்கர்ஸ் மற்றும் ஸ்ரீஅம்மன் ரியல்எஸ்டேட் குழும நிறுவனங்களின் மேலாண் தலைவர் முத்தையா சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார். அவருக்கு நிறுவனத் தலைவர் சேகர் உறுப்பினர் அட்டை மற்றும் புதிய உறுப்பினர்கள் படிவங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து ஸ்ரீஅம்மன் முத்தையா பரிந்துரையின் பேரில் நிறுவன தலைவர் எம்.வி. சேகர் பெரம்பலூர் மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து அறிவித்துள்ளார்.
அதன்படி, பெரம்பலூர் மாவட்ட தலைவராக அன்னமங்கலம் ஜெயராமன், மாவட்ட துணை தலைவர்களாக நாட்டார்மங்கலம் பச்சமுத்து, பூலாம்பாடி செல்வராஜ், மாவட்ட செயலாளராக கீழப்புலியூர் பிரபாகரன், மாவட்ட துணை செயலாளராக வடக்குமாதவி ராமர், கீழமாத்தூர் ஜெயராமன், மாவட்ட பொருளாளராக குரூர் ராஜமோகன்,மாவட்ட அமைப்பு செயலாளர்களாக அன்னமங்கலம் கோவிந்தராஜ், கொளத்தூர் ராமசாமி, ரஞ்சன்குடி பெரியசாமி, வேள்விமங்கலம் வெங்கடேஷ் ஆகியோரும், அணி செயலாளராக கீழக்கரை பாலசேகரன், இளைஞரணி செயலாளராக பெருமத்தூர் கோவிந்தசாமி, மகளிர் அணி செயலாளராக கிருஷ்ணாபுரம் மல்லிகா, மகளிர் அணி இணை செயலாளராக செங்குணம் அம்மு, துணை செயலாளராக மேலமாத்தூர் மகேஸ்வரி, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக எசனை திருவள்ளுவர், தொழிலாளர் அணி செயலாளராக வடக்குமாதவி மருதமுத்து ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கட்சி நிர்வாகிகளுக்கு கட்சி தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என மாநில செயலாளர் அம்மன்முத்தையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விளம்பரம்: