Perambalur: Government Music Training School students perform devotional songs at Shiva Temple!
பெரம்பலூர் சிவன் கோவிலில், ஆவணி அமாவாசையை முன்னிட்டு அரசு இசைப்பள்ளி பயிற்சி மாணவர்கள், வாய்ப்பாட்டு ஆசிரியர் நடராஜன் தலைமையில் விநாயகர் மற்றும் ஈசன் முன்னிலையில் விநாயகர் துதி, தேவாரம், திருவாசகம், திருப்புகழ், முருகன் கவசம். போன்ற பாடல்களை பாடி பயிற்சி பெற்று பரவசம் அடைந்தனர். செயல் அலுவலர் என்.ரவிச்சந்திரன், முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தனர். பயிற்சி மாணவர்களுக்கு மகா தீபாராதனை காண்பித்து முல்லை சிவாச்சாரியார் பிரசாதம் வழங்கினார்.