Perambalur: Gram Sabha meetings to be held in 121 panchayats tomorrow; Collector informs!
02.10.2025 காந்தி ஜெயந்தி அன்று நடைபெறவிருந்த கிராம சபைக்கூட்டம் 11.10.2025 அன்று பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது என கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார். இக்கிராம சபைக்கூட்டத்தில் அனைத்து கிராம சபை உறுப்பினர்களும் தவறாது கலந்து கொண்டு, கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை கண்டறிந்து, அரசு நலத்திட்டங்கள் இக்கூட்டத்தில் வழங்கி அரசின் தேவைகளை மக்களிடையே கேட்டறிப்படும்.
கிராம மக்களின் அத்தியாவசியமான தேவைகளை தேர்வு செய்து கிராமசபை ஒப்புதல் பெறுதல், இழிவுபடுத்தும் பொருள் தரும் சாதிப் பெயர்கள் (Derogatory Caste Name) கொண்ட குக்கிராமங்கள் சாலைகள், தெருக்கள், குடிநீர் ஆதாரங்கள் மற்றும் பொது சொத்துக்களின் பெயரை மாற்றுதல் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்து விவாதித்தல், ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்,
கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் வரவு செலவு மற்றும் பணி முன்னேற்ற அறிக்கை குறித்து விவாதித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்து விவாதித்தல், தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம் குறித்து விவாதித்தல், அனைத்து வகையான தொழில்களில் குழந்தைகளும் மற்றும்அபாயகரமான தொழில்களில் வளினம் பருவத்தினரும் இல்லை என்பது குறித்து விவாதித்தல்,
தாயுமானவர் திட்ட கணக்கெடுப்பு மற்றும் மக்கள் நிலை ஆய்வு குறித்து விவாதித்தல், கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் பயிற்சி திட்டம் குறித்து விவாதித்தல், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களின் (RSETI) வாயிலாக வழங்கப்படும் சுயவேலைவாய்ப்பு பயிற்சிக்கு தகுதியான இளைஞர்களை விண்ணப்பிக்க அறிவுறுத்துதல்குறித்து விவாதித்தல், சபாசார் செயலி செயல்பாடுகள் குறித்து விவாதித்தல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம யோஜனா PMAGY திட்டம். மற்றும் இதர பொருட்கள் தொடர்பாக விவாதிக்கப்படும்.
11.10.2025 காந்தி ஜெயந்தி அன்று கிராம சபைக்கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிராம சபா உறுப்பினர்கள் (கிராம ஊராட்சி வாக்காளர்கள்) அனைவரும் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபைக்கூட்டங்களில் பங்கேற்று, அனைத்து துறை வாரியான அலுவலர்கள் கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொள்வதோடு, துறை தொடர்பான திட்டங்கள் பொதுமக்கள் நன்கு அறியும் வகையில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.
இக்கிராம சபைக்கூட்டம் நல்லமுறையில் நடைபெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வட்டாரம் வாரியாக மாவட்ட நிலை அலுவலர்கள் மண்டல அலுவலர்களாக கிராம சபைக்கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 11.10.2025 காந்தி ஜெயந்தி அன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சரின் கிராம சபை உரை TNFINET நெட்வொர்க் வாயிலாக கிராம ஊராட்சிகளுக்கு ஒளிபரப்பப்படும்.
11.10.2025 அன்று கிராம சபைக்கூட்டத்தில் கிராம சபை உறுப்பினர்களாகிய வாக்காளர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கும், ஆக்கப்பூர்வமான ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சிகளின் இதரபொருட்கள் குறித்தும் விவாத்தித்திட அனைவரும் கலந்து கொள்ளவேண்டுமென கலெக்டர் தெரிவித்துள்ளார்