By identifying the causes of infertility and correcting them at the beginning, it is possible to conceive naturally; says Dr. Aruna Muruganantham, a gynecologist and obstetrician at Harshita Hospital, Perambalur!

பெரம்பலூர் 4 ரோடு, அரியலூர் சாலையில் உள்ள செல்வா நகரில் நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாய் ஹர்ஷிதா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவ நிபுணர் அருணா முருகானந்தம் தெரிவித்தாவது:
மகப்பேறில் பெயர் பெற்ற பெரம்பலூர் ஹர்ஷிதா மருத்துவமனை. மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவம் மற்றும் பொது அறுவை சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவ குழுவினர் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவம், பெண்கள் நல சிகிச்சை அளித்து வருகின்றனர். 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படுகிறது. டாக்டர் முருகானந்தம் தலைமையிலான மருத்துவ குழுவினர் அவசர சிகிச்சை பிரிவு பொது அறுவை சிகிச்சை லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை, எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை அளிக்கின்றனர். அதிநவீன உபகரணங்களுடன் கூடிய அறுவை சிகிச்சை அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
பெண்களின் வாழ்க்கையில் ஒரு முக்கிய பகுதியான மகப்பேறு காலங்களில் பெண்கள் உடல்நிலையை காத்துக் கொள்வது அவர்களுக்கு மட்டுமல்ல, அவரை சார்ந்த சிசுவின் வளர்ச்சிக்கும் இன்றியமையாததாகும். தாய்மை நிலை உறுதி செய்யப்பட்ட உடனே மருத்துவரின் ஆலோசனைப்படி மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
ஹர்ஷிதா மருத்துவமனையில் குழந்தையின்மை காரணங்களை கண்டறிந்து அதனை தொடக்கத்திலேயே சரி செய்கிறோம். இதனால் இயற்கையாக கருத்தரிக்க இயல்கிறது. கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணமாக எச்.பி.வி வைரஸ் தடுப்பூசி மருந்தும் இம்மருத்துவமனையில் செலுத்தப்படுகிறது என அவர் தெரிவித்தார்.
Dr. Aruna Muruganantham, a Gynecologist and Obstetrician at Harshitaa Hospital, 4 Road ,East Perambalur!












kaalaimalar2@gmail.com |
9003770497