Perambalur: Head-on collision between 2 vehicles; One killed! Another injured!

பெரம்பலூர் அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் முதியவர் ஒருவர் பலியானார். மற்றொரு காயமடைந்த வாலிபர் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெரம்பலூர் அருகே பொம்மனப்பாடியை சேர்ந்தவர் செல்லமுத்து மகன் தேவராஜ்(65), இவர் இன்று காலை சுமார் 7.45 மணியளவில், பொம்மனப்பாடியில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலையில், மொபட்டில் சென்றுக் கொண்டிருந்தார். அங்கிருந்த தனியார் பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் போட திரும்பி உள்ளார். அப்போது, திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள வாளவந்தான் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சக்திவேல் (28), சென்ற பைக் தேவராஜ் வந்த மொபட் மீது மோதி விபத்திற்குள்ளானது. சம்பவ இடத்திலேயே தேவராஜ் படுகாயமடைந்து உயிரிழந்தார். காயமமைந்த சக்திவேல் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். தேவராஜின் உடல் உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.











kaalaimalar2@gmail.com |
9003770497