Perambalur Health inspectors request the government to provide a laptop to work
பெரம்பலூரில், பிறப்பு-இறப்பு பதிவுபணி மேற்கொள்ளும் சுகாதாரத்துறை ஆய்வாளர்களுக்கு மடிக்கணினி வழங்கவேண்டும் தமிழக அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட பொதுசுகாதாரத்துறை அலுவலர்கள் கூட்டமைப்பின் பொதுக் குழுக்கூட்டம் துறைமங்கலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டமன்றத்தில் இன்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.
இதில் கவுரவத்தலைவர் ராஜாமோகன், செயலாளர் வெங்கடாசலம், பொருளாளர் ரவிசந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆளவந்தார் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் வாழ்த்தி பேசினார்.
கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பு நிதிஆண்டில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியை சிறப்பாக செய்தமைக்காக பொதுசுகாதாரத்துறை அலுவலர்களை பாராட்டிய துணை இயக்குனருக்கு நன்றி தெரிவித்தும், சுகாதார ஆய்வாளர்களுக்கு கூடுதல் பயணப்படி வழங்க நிதிஒதுக்கீடு செய்ததரவேண்டும். பிறப்பு, இறப்பு பதிவு பணியை ஆன்லைனில் மேற்கொள்ள தமிழக அரசு மடிக்கணினி வழங்ககோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.