Perambalur: HIV/AIDS awareness rally on sexually transmitted diseases: Collector inaugurated!
பெரம்பலூர் பாலக்கரை பகுதியில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலகம் சார்பில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ச.அருண்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கிய அவர், ஓசை கலைக்குழுவினரின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டினார்.
இந்த பேரணி பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் தொடங்கி வெங்கடேசபுரம், கிருஷ்ணா தியேட்டர் சங்குப் பேட்டை, காமராஜர் வளைவு வழியாக ஆத்தூர் சாலையில் உள்ள பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் நிறைவுபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவிகள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திக்கொண்டு பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் மருத்துவ நலப்பணிகள் மரு.மாரிமுத்து, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலர்/ மாவட்ட சுகாதார அலுவலர் கீதா, மாவட்ட திட்ட மேலாளர் (பொ) சுமதி, துணை இயக்குநர் (காசநோய்) நெடுஞ்செழியன், தேசிய சுகாதாரக் குழுமம் உதவி திட்ட அலுவலர் விவேகானந்தன், ஆற்றுப்படுத்துநர் பழநிவேல் ராஜன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு பணியாளர்கள், நம்பிக்கை மைய ஆலோசகர்கள், எச்.ஐ.வி சேவை பிரிவு தொண்டு நிறுவனர் பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.