Perambalur: Home health aide training for SC, ST youth; Collector informs!

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது தாட்கோ மற்றும் டால்மியா பாரத் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வீட்டு சுகாதார உதவியாளர் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இப்பயிற்சியில் சேர்ந்து பயில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்களாகவும் 18 முதல் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும். 10 மற்றும் 12ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்புடன் ஆரம்ப காலமாத ஊதியமாக ரூ.15,000/- முதல் ரூ.17000/-வரை கிடைக்க வழிவகை செய்யப்பபடும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

இப்பயிற்சி பெற தாட்கோ www.tahdco.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் இப்பயிற்சிக்கான கால அளவு இரண்டு மாதம். மேலும் சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி, உணவுக்கான செலவினம் நிறுவனம் மூலமாக வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்களுக்கு 04328 – 276317 என்ற எண்ணிலோ அல்லது தாட்கோ, பெரம்பலூர் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து பயனடையுமாறு கலெக்டர் அருண்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!