Perambalur: Illegal liquor seller arrested! 150 bottles seized!
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே உள்ள காரை கிராமத்தில் வரகுபாடி செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. பாரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக இன்று காலை தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், பேரில் எஸ்ஐ ரமேஷ் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கோட்டத்தூரை கிராமத்தைச் சேர்ந்த வைரபெருமாள் மகன் ராஜா (55) என்பவரிடம் நடத்திய விசாரணையில், அரசு டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை விற்பனைக்காக வாங்கியதை தெரிய வந்ததையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவர் பதுக்கி வைத்திருந்த சுமார் 150 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.