Perambalur in the AIADMK party consultation meeting regarding the election of the District Cooperative Union
அதிமுக சார்பில், பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு சங்க தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம், தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் என்.ஆர். சிவபதி தலைமையில் நடந்தது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நான்கு கட்டங்களாக கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறுகிறது. அதிமுக கட்சிக்கு தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சரும் இளைஞரணி செயலாளருமான எம்.ஆர். சிவபதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் நடக்கும் தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகள், முக்கிய பொறுப்பாளர்கள் இடையே கலந்துரையாடல் நடந்தது, மேலும், கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ ஆர்.டி ராமச்சந்திரன், மற்றும் பெரம்பலூர் எம்.எல்.ஏ இரா.தமிழ்ச்செல்வன், மாவட்ட அணிச்செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் மருதைராஜா ( பெரம்பலூர்), கர்ணன் (ஆலத்தூர்), சிவப்பிரகாசம் (வேப்பந்தட்டை), கிருஷ்ணசாமி (வேப்பூர்), பெரம்பலூர் நகர செயலாளர் ராஜபூபதி, மகளிர் அணியினர் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.