பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே ராஜா அருகே கை.களத்தூர் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ்(35) (கார் டிரைவர்), தனது பைக்கில் சாலையை கடக்க முயன்றார் அப்போது அவ்வழியே வந்த கார் பைக் மீது மோதியது.
கார் மோதிய வேகத்தில் 15 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்ட பைக் திடீரென தீப்பற்றி வெடித்து சிதறியது. பைக்கில் இருந்த செல்வராஜ் தூக்கி வீசப்பட்டார். படுகாயத்துடன் அலறினார். அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கிய செல்வராஜை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுப்பp வைத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.
மோதி விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் தப்பித்து சென்றது, புகாரின் பேரில் வழக்கு செய்து பெரம்பலூர் காவல் நிலையத்தினர் காரை தேடி வருகின்றனர்.