Perambalur Krishna Theatre: Entertained 4 generations, millions of fans; Says farewell today with house full shows!

பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் ரெட்டியார் குடும்பத்தினர், 1960 களில் பெரம்பலூரில் வசித்து வந்த திருநெல்வேலியை சேர்ந்த பக்கிள் நாடார் குடும்பத்தினர் நடத்தி வந்த லட்சுமி தியேட்டரை ஜெயச்சந்திரன் மற்றும் குணசேகரனிடம் இருந்து வாங்கி கிருஷ்ணா தியேட்டர் என பெயர் மாற்றம் செய்தனர். சினிமா மக்களின் பொழுது போக்குமட்டுமில்லாமல், பாடமாகவும், வழிகாட்டியாகவும், இசை, காதல், வீரம், வரலாறு, பக்தி மற்றும் விழிப்புணர்களை யூ-டியூப், போன்ற சமூக வலைத் தளங்கள் இல்லாத காலக்கட்டத்தில் ஏற்படுத்தியது. அன்றைய காட்சிகளில் வந்த நடிகர்களே பிரபலமாகி பின்னாளில் நாட்டை தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களில் உண்டு.

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் கிருஷ்ணா தியேட்டரை சுற்றி ஆரம்ப காலகட்டத்தில் மிக குறைந்த குடியிருப்புகளே இருந்தன. நகரம் வளர வளர கிருஷ்ணா தியேட்டர் சுற்று வட்டப்பகுதிகளில், குடியிருப்புகளும், வணிக நிறுவனங்களும் அதிகமாகி தற்போது நகரின் பிரதான பகுதியாக தியேட்டரால் மாறிவிட்டது. அதே சம காலக்கட்டத்தில் ரோவர் உள்ளிட்ட கல்வி நிறுனங்கள், சர்ச்சுகளும் வந்திருந்தன.

மாவட்டத்தின் பல ஊர்களில் ஆரம்பிக்கப்பட்ட டூரிங்-டாக்சிகள், சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டும், திருமண மண்டபங்கள் ஆன நிலையில், கிருஷ்ணா தியேட்டர் காலத்திற்கு ஏற்ப தன்னை பல தொழில்நுட்பங்களை அப்டேட் செய்து கொண்டது. தியேட்டர் ஆரம்பித்து சுமார் 65 ஆண்டுகள் முடியும் நிலையில், அதன் உரிமையாளரும், முன்னாள் சேர்மனுமாக மு. ராஜாராம் ஆதரவு கொடுத்த சினிமா ரசிர்களை மகிழ்விக்க வீரபாண்டியன் கட்டபொம்மன் படத்தை திரையிட்டு கடந்த 4 நாட்களாக இலவசமாக அனுமதித்தார். அதோடு, இன்முகத்துடன் வரவேற்று இருக்கையில் அமர தியேட்டர் ஓனர் ராஜாராம் மற்றும் தியேட்டர் ஊழியர்கள் ரசிகர்களுக்கு உதவினர்.

50, 60 ஆண்டுகளுக்கு முன்பு வாலிப வயதில் வந்து படம் பார்த்த ரசிகர்கள், தியேட்டர் இடிக்கப்பபோவதை அறிந்து, தங்கள் வாலிப வயதில், தாங்கள் ரசித்ததை 50 ஆண்டுகளுக்கு பிறகு மலரும் நினைவுகளுடன் பேரன், பேத்திகள், மகள், மகனுடன் வந்து குடும்பம் குடும்பமாக வந்து பார்த்தனர். தியேட்டரில் டிவி வருவதற்கு நிலை எப்படி இருந்ததோ அதே போன்று அரங்கம் நிரம்பி ஹவுஸ் புல்லானது. இடம் கிடைக்காத ரசிகர்கள் படிக்கட்டு கட்டைகளிலும், தரையிலும் அமர்ந்து ஏராளமான ரசிகர்கள் சினிமாவை கண்டு களித்தனர். படத்தை பார்த்து விட்டு, தியேட்டர் இடிப்படபோவதை நினைத்து ஏதோ ஒரு மனப்பாரத்துடன் வெளியே சென்றனர். இன்றே இப்படம் கடைசி என போஸ்டர் ஒட்டிய காலம் போய், இன்றே இந்த தியேட்டர் இறுதி நாளா! என விடையளித்து சென்றனர். பலர் தியேட்டரில் போட்டோவும், செல்பிக்களும் எடுத்துக் கொண்டனர்.

மேலும், தியேட்டர் உரிமையாளர் மு.ராஜாராம் தெரிவித்ததாவது: ரசிகர்களோடு மனிதில் கிருஷ்ணா தியேட்டருக்கு நீங்காத இடம் உண்டு. அவர்கள் மீண்டும் ஒரு முறை அவர்கள் தியேட்டரை வந்து பார்த்து செல்ல வேண்டும் என கடந்த 4 நாட்களாக ரசிகர்களுக்கு அனுமதித்துள்ளோம். கட்டிடம் பழையதாகி விட்டதால் இடித்துவிட்டு புத்தம் புதிய தொழில்நுட்பங்கள் கூடிய மல்டி பிளக்ஸ் சினிமா தியேட்டராக மாற்ற உள்ளோம் என தெரிவித்தார். தியேட்டரை இடிப்பதற்கு முன்பு முறையாக பதாகை வைத்து அறிவிப்பு செய்து, நன்றி தெரிவித்த தியேட்டர் ஓனர் ராஜாராமை ரசிகர்கள் பாராட்டி சென்றனர்.


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!