Perambalur Lakshmi Vilas Bank celebrate world womes day

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள லட்சுமி விலாஸ் வங்கி கிளையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வங்கி வாடிக்கையாளர்களின் குழந்தைகளுக்கு இடையே. உலகத்திற்காக மரங்கள், நமது வாழ்க்கைக்காக பெண்கள் என்ற தலைப்புகளில் ஓவியப் போட்டிகள் நடைபெற்றன.

இதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்புவிழா மற்றும் உலக மகளிர் தின விழாவையொட்டி மகளிரை கவுரவிக்கும் விழா வங்கி வளாகத்தில் நடந்தது.

விழாவிற்கு வங்கி கிளை மேலாளர் அன்ந்தநாராயணன் தலைமை வகித்தார். இதில் கிறிஸ்டியன் கல்விக் குழுமத்தின் செயலாளார் மித்ரா, பெண் தொழில் முனைவோர் புவனேஸ்வரி ராஜசேகர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஓவியப் போட்டியில் முதல் 3 இடங்களை பெற்ற கோல்டன்கேட்ஸ் பள்ளி மாணவி லட்சுமிஸ்ருதி, கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவி மஹதிகுருராஜ், செயிண்ட் ஜோசப் பள்ளி மாணவர் கோபிநாத் ஆகியோருக்கு சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டினர்.

மகளிர் தினத்தின் முக்கியத்துவம் குறித்து வேளாண்மை அலுவலர் பிரியா மற்றும் குரும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை மெய்யம்மை, தனியார் பள்ளி கணக்காளர் சங்கீதா உள்பட பலர் பேசினார்கள். விழாவில் பங்கேற்ற அனைத்து மகளிருக்கும், வங்கி நிர்வாகத்தினர் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தனர்.

விழாவில் முன்னதாக வங்கி ஊழியர் கோகிலா வரவேற்றார், ரேவதி நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!