Perambalur: Laptop, cell phone taken away after threatening a teenager with a knife!

AI Photo
பெரம்பலூர் அருகே உள்ள வரகுபாடி கிராமத்தை சேர்ந்தவர் கருப்புசாமி மகன் கவியரசன் (41). இவர் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் லேப்டாப் சர்வீஸ் சென்டர் வைத்துள்ளார். நேற்று இவர், தனது லேப்டாப்பை சரிசெய்ய பைக்கில் இரூர் வந்துள்ளார். அங்கிருந்து பஸ்சில் திருச்சிக்கு பஸ்சில் சென்று பணிகளை முடித்த பின்னர் மீண்டும் பஸ்சில் இரூருக்கு வந்து இறங்கினார். இரவு சுமார் 10.45 மணி அளவில் இரூர் பஸ் ஸ்டாப்பில் இறங்கியபோது அங்கு 2 பைக்குகளில் திடீரென வந்த 4 பேர் கொண்ட கும்பல், கவியரசனிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.82 ஆயிர் மதிப்புள்ள லேப்டாப், மவுஸ், கீபோர்டு, மற்றும் செல்போனையும் பறித்து கொண்டு தப்பி தலைமறைவாகினர். இது குறித்த புகாரின் பேரில் டிஎஸ்பி சுரேஷ், பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கயல்விழி சம்பவ இடத்திற்கு தீவிர விசாரணை நடத்தினர். வழக்குப் பதிவு செய்த பாடாலூர் போலீஸார் மர்மநபர்களை தீவிர தேடி வருகின்றனர். இப்பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி, திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதால் போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என இரூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497