Perambalur: Lawyers Association holds protest demanding arrest of lawyer who tried to insult Supreme Court judge!
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், சுப்ரீம் கோர்ட் நீதிபதியை அவமானப்படுத்த முயன்ற வக்கீலை கைது செய்யக்கோரி பெரம்பலூரில் வழக்கறிஞர்கள் பார் அசோசியேயன் சங்கத்தினர் சங்க தலைவர் இ. வள்ளுவநம்பி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மூத்த வழக்கறிஞர் ஆர் வாசுதேவன், வழக்கறிஞர் சங்க செயலாளர் சேகர் முன்னிலை வகித்தனர்.
இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி ஆர் கவாயை, வழக்கறிஞர் ராஜேஷ் கிஷோர் என்பவர் நீதிமன்றத்தில் வாதங்கள் நடந்து கொண்டிருக்கும் போது காலனியை எடுத்து வீசியதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி கோசமிட்டனர். அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யவும் வலியுறுத்தினர். பொருளாளர் சிவராமன், முன்னாள் அரசு சிறப்பு வழக்கறிஞர் பெரம்பலூர் கதிர். கனகராஜ், வழக்கறிஞர் பேரா. முருகையன் உள்பட மூத்த வழக்கறிஞர்கள், பெண் வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டடேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.