Perambalur: Long-distance running competition on the occasion of Anna’s birthday; Collector’s information!
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆண்டுதோறும் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்படும் மாராத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப்போட்டி 27.09.2025 அன்று காலை 8.00 மணியளவில் மாவட்ட ஆட்சியரக வளாகத்தின் அருகில் நடைபெற உள்ளது. இப்போட்டி 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ தூரமும், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ தூரமும் நடத்தப்பட உள்ளது.
போட்டி நடைபெறும் இடத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே போட்டியாளர்கள் வருகை தர வேண்டும். போட்டிகளில் கலந்துகொள்பவர்கள் பதிவுபெற்ற மருத்துவரிடம் இருந்து உடற்தகுதி சான்று (Fitness Certificate from Registered Medical practitioner) பெற்று வருதல் வேண்டும்.
போட்டிகளில் வெற்றிப் பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000/- வீதமும் இரண்டாம் பரிசாக ரூ.3,000/- வீதமும், மூன்றாம் பரிசாக ரூ.2,000/- வீதமும் நான்காம் இடம் முதல் பத்தாம் இடம் பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.1000/-வீதமும் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும். எனவே, பள்ளி/கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் வயது சான்றிதழ், பதிவுபெற்ற மருத்துவரிடம் இருந்து உடற்தகுதி சான்று( Fitness Certificate from Registered Medical practitioner), வங்கிக் கணக்கு புத்தக நகல், ஆதார் கார்டு நகல் ஆகியவற்றுடன் 27.09.2025 அன்று காலை 7.00 மணிக்கு தங்கள் பெயரினை முன்பதிவு செய்து போட்டிகளில் கலந்து கொள்ளுமாறும், மேலும், இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலுவலரை 7401703516 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.