பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம் காரை ஊராட்சிக்கு உட்பட்ட மலையப்ப நகரில் குன்னம் தொகுதி வேட்பாளர் துரைராஜ் இன்று காலை வாக்கு சேகரிக்கும் பணியை துவக்கினார்.
அப்போது அங்கிருந்த நரிக்குறவ சமுதாய மக்கள் மணிமாலைகள் அணிவித்து வரவேற்றனர். வெடிகள் முழக்கமிட்டு வரவேற்றனர். அப்போது அவர்கள் வேட்பாளர்களிடம் தெரிவித்தாவது:
1979 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது திருச்சி மாவட்டம் தேவராயநேரி பகுதியில் நரிக்குறவர்களுக்காக காலணி அமைத்து கொடுத்தது. மலையப்ப நகரில் திமுக ஒன்றிய செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி முயற்சியுடன், மலையப்ப நகர் முதல் நாரணமங்கலம் வரை சாலை தார் சாலையாக அமைத்து கொடுத்தது. குடிக்க தண்ணீர் இன்றி அலைந்து திரிந்த எங்களுக்கு குடிவசதி செய்து கொடுத்துள்ளனர். மினி பஸ், அரசு பஸ் ஆகிய வசதிகளும் செய்யப்பபட்டுள்ளது.
கூட்டணி ஆட்சியில் இருந்த போது ரூ.12 லட்சம் மதிப்பில் சமுதாயக் கூடம் அமைத்து கொடுத்து எங்களுக்கு பல வகையில் திமுக உதவி உள்ளது. எனவே இமுறை வெற்றி பெறும் போது எங்களுக்கு இப்பகுதியில் ரேசன் கடை அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட குன்னம் தொகுதி வேட்பாளர் த.துரைராஜ் பகுதி நேர ரேசன் கடை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.
அப்போது ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் ந.கிருஷ்ணமூர்த்தி, காரை ஊராட்சி பிரதிநிதி சிவக்குமார், மலையப்ப நகர் கிளைக்கழக பிரதிநிதி எம்.ரமேஷ், ஆர்.பிரபு, மற்றும் வெள்ளித்துரை, சத்யராஜ், ராமராஜ், ராஜ்குமார், ரகுமான் மற்றும் கொளக்காநத்தம் ஊராட்சி மன்ற துணைத் தலைவரும், கிளைக் கழக பொறுப்பாளருமான ராகவன், ஆலத்தூர் ஒன்றியக் குழு முன்னாள் சேர்மன் முத்துக்கண்ணு, காரை முன்னாள் கவுன்சிலர் சுந்நதரராஜ், கூட்டணி கட்சியை தமிழக ராகுல் காந்தி பேரவையை சேர்ந்த தேனூர் கிருஷ்ணன் , காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை பிரிவுத் தலைவர் காமராஜ், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட பொருளாளர் சாமிதுரை, வட்டராத் தலைவர் காமராஜ், காங்கிரஸ் பிரமுகர் செல்வக்குமார் உள்பட தோழமை கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர், சமத்துவபுரம், புதுக்குறிச்சி, காரை, திம்மூர், அருணகிரிமங்கலம், மாக்காய்குளம், ரசுலாபுரம், பாலம்பாடி, ஜெமீன்ஆத்தூர், மேத்தால், காரைப்பாடி, சில்லக்குடி, கொளத்தூர், கூடலூர், இலுப்பைக்குடி, அயினாபுரம், அனைப்பாடி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.