Perambalur: Man arrested for possessing around 6 kg of gutka banned by the government!
பெரம்பலூரில் தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில், பெரம்பலூர் பாரதிதாசன் நகரில் கடை நடத்தி வரும் அருணாச்சலம் மகன் கணேசன் (59) என்பவர் அரசு தடை செய்த குட்கா பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்தது. அவரை கைது செய்த தனிப்படை போலீசார், அவரிடமிருந்து 4.425 கிலோ கிராம் விமல் பாக்கு மற்றும் 1.650 கிலோ கிராம் V1-பான் மசாலா என மொத்தம் 6.075 கிலோ கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
இது போன்று கஞ்சா, குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும், என போலீசார் தெரிவித்துள்ளனர்.