Perambalur: Man dies after seeking treatment from Quack doctor! he arrested on complaint from health department!

பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் அங்காளம்மன் மெடிக்கல் நடத்தி வருபவர் ராஜேந்திரன், இவர் திட்டக்குடி மருத்துவமனை பணியாளராக இருந்துள்ளளார். இந்நிலையில், கரூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (44). இவர் பெரம்பலூர் ரோஸ் நகர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவருக்கு சர்க்கரை நோய் இருந்தாக கூறப்படும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மெடிக்கல் நடத்தி வந்த ராஜேந்திரனிடம் மருந்து வாங்கி சாப்பிட்டும், டிரிப்பும் போட்டுள்ளார். இதில் அவர் உயிரிழந்தாக கூறப்படுகிறது. அவரது உறவினர்கள் அடக்கம் செய்த நிலையில், இது குறித்த புகார்கள் சுகாதார அதிகாரிளுக்கு புகார்கள் கரூரில் இருந்து வரவே, மெடிக்கல் கடை வந்த ராஜேந்திரனை ஊசி மருந்து மாத்திரைகளை கொடுத்து வைத்தியம் பார்த்த போது கையும் களவுமாக பிடித்த சுகாதாரத் துறை அதிகாரிகள் பெரம்பலூர் டவுண் போலீசாரிடம் ஒப்படைத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

படித்த டாக்டர்களை விட 10 ம் வகுப்பு படித்து விட்டு மெடிக்கல் கடை நடத்தி வரும் போலி டாக்டர்கள் அதிகமாக வைத்தியம் பார்த்து சம்பாதித்து வருகின்றனர். எசனை, கீழக்கரை, வேப்பந்தட்டை, லாடபுரம், குன்னம், வாலிகண்டபுரம், உள்ளிட்ட பல குக்கிராமங்களில் மெடிக்கல் நடத்தி வருபவர்களுக்கு ஆதரவாக MBBS படித்த டாக்டர்களே போர்டு வைத்து கொள்ள பணம் பெற்றுக் கொண்டு அவர்களை காக்கும் கேடயமாக இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!