Perambalur market merchants are struggling to claim additional customs duty
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே நகராட்சிக்கு சொந்தாமான தினசரி காய்கறி மார்க்கட் இயங்கி வருகிறது. இதில் 99 கடைகள் கட்டத்திலும், சுற்றுப் பகுதியில் 50 கடைகளும், 50 க்கும் மேற்பட்ட தரைக்கடைகளும் இயங்கி வருகின்றன. இந்த மார்கட்டிற்று பெரம்பலூர் சுற்று வட்டாரத்தில் விவாசாயிகள் விளைவிக்கும் காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும் காய்கறிகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது புதிதாக ஏலம் எடுத்துள்ள ஏலதாரர் கூடுதல் சுங்க கட்டணம் வசூலிப்பதாக கூறி இன்று காலை முதல் காய்கறி வியாபாரிகள் காலவரையற்ற கடை அடைப்பு நடத்தி வருகின்றனர். மேலும், இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி எம்.எல்.ஏ இரா.தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்), மற்றும் பெரம்பலூர் நகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்து முறையிட்டனர். மேலும், மாவட்ட ஆட்சியரிடம் இது தொடர்பாக மனு கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும என்றும், பழைய சுங்க கட்டணத்தை வசூலிப்பதுடன் அறிவிப்பு பலகையிலும் எழுத வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.