Perambalur: MCOP camp at Pudunadavalur: A sum of Rs 4.30 crores has been allocated.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழா பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட புதுநடுவலூர் கிராமத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல துறைகள் சார்ந்த திட்டங்கள் குறித்தும், இத்திட்டங்கள் மூலமாக பொதுமக்கள் பயன்பெறுவதற்குண்டான வழிமுறைகள் குறித்தும் தொடர்புடைய அலுவர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வருவாய்த் துறை மூலம் 367 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 69 லட்சச்து 96 ஆயிரம் மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களும், நத்தம் பட்டா நகல்கள், திருமண உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை பெறுதல் உள்ளிட்ட நலத்திட்டங்களும்,

வேளாண்மைத்துறையின் மூலம் 19 பயனாளிகளுக்கு ரூ.9,48,008- மதிப்பீட்டிலான நலத்திட்டங்களும், தோட்டக்கலைத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.1,16,365- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளையும்,

ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் 36 பயனாளிகளுக்கு ரூ.83,36,554- மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், தாட்கோ மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.22,06,945- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும்,

பணிக்கு செல்லும் மகளிருக்கான அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் மூலம் 15 பயனாளிகளுக்கு ரூ.3,75,000- மதிப்பீட்டில் இருசக்கர வாகனங்களும், பிரதம மந்திரி வேலைவாய்ப்பு திட்டம் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.14,01,000- மதிப்பீட்டில் நலத்திட்டங்களும் என பல்வேறு துறைகளின் சார்பில் 447 பயனாளிகளுக்கு ரூ.4,03,79,872- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஸ்ரீதர், வருவாய் கோட்டாட்சியர் (பொ) சேதுராமன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திரு.மனோகரன், வட்டாட்சியர்கள் பாலகிருஷ்ணன், சிவக்குமார் (ச.பா.தி) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!