To protect your kidneys, do not buy and consume medicines directly from pharmacies; they can harm your kidneys! Perambalur MG Hospital Doctor. G. Thirumal advises!

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 4 ரோடு செல்லும் வழியில் உள்ள எம்.ஜி மருத்துவமனை நிறுவனரும், சிறுநீரியல் அறுவை சிகிச்சை நிபுணருமான கோ.திருமால் தெரிவித்ததாவது:
எங்கள் எம்.ஜி மருத்துவமனை மறைந்த எனது தந்தையாரும், ஓய்வு பெற்ற தலைமையசிரியருமான திரு எம். கோபால் அவர்களின் எண்ணத்திலும், நலமுடன் இருக்கும் எனது தாய் மாணிக்கம் அவர்களின் தூண்டுதலின் பேரிலும் உருவானது. மருத்துவமனை சிறுநீரியல் அறுவை சிகிச்சைகள், பொது அறுவை சிகிச்சைகள், பொது மருத்துவம், மகளிர் மகப்பேறு மருத்துவம் ஆகிய துறைகளை உள்ளடக்கி சிகிச்சைகள் இயங்கி வருகிறது. எம்.ஜி மருத்துவமனை தொடங்கி 12 ஆண்டுகள் கடந்தும் நாங்கள் நற்பெயருடன் நல்ல சேவை செய்து கொண்டு வருகிறோம் என்று நம்புகிறோம். மக்களும் அவ்வண்ணமே நம்புகின்றனர் என்று நினைக்கிறேன்.
சிறுநீரகம் என்பது நமது உடலின் கழிவுகளை நீரின் மூலம் வெளியேற்றும் ஒரு முக்கிய உடல் உறுப்பு. இந்த சிறுநீரகம் நன்றாக செயல்படும் வரையிலும் மனிதனுக்கு எவ்வித குறைபாடும் இருப்பதில்லை. ஆனால், சிறுநீரக குறைபாடு ஏற்பட்டால் அதில் நிரந்தர வகையான சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டால், மனிதனின் வாழ்க்கை மிகவும் மோசமாகிவிடுகிறது. சர்க்கரை நோய் வருவதற்கு முன்பெல்லாம், சிறுநீரகக் கோளாறுகள் பலவித காரணங்களால் உண்டாகி இருந்தும், அவை மிகச் சிலரையே பாதித்து வந்தன. ஆனால், இப்பொழுது பழக்க வழக்கங்களாலும் உணவு முறைகளாலும் உலகத்திலேயே அதிகமாக சர்க்கரை நோயாளிகள் உள்ள நாடாக இந்தியா மாறி வருகிறது. இந்த சூழ்நிலையில் சர்க்கரையை சரியான அளவில் கட்டுப்பாட்டில் வைத்திருக்காத நோயாளிகளுக்கு, இந்த சிறுநீரக கோளாறுகள் அதிகம் வர ஏதுவாகிறது. அது மட்டுமன்றி, நமது நாட்டில் மருந்தகங்களில் நேரடியாக சென்று மக்கள் மருந்துகளை வாங்கி அவர்களின் உபாதைகளுக்கு உண்ணும் பழக்கம் அதிகமாக இருப்பதால், அதுவே, சிறுநீரக கோளாறுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
சிறுநீரக பாதிப்பு இரண்டு வகைப்படுகிறது. ஒன்று தற்காலிகமாக உண்டாகும் கோளாறு. மருந்து மாத்திரைகளால் முழுமையாக குணப்படுத்த முடியும். ஆனால், நிரந்தரமாக ஏற்படும் கோளாறு மக்களை நிரந்தரமான நோயாளியாக்கி படுக்கையில் தள்ள ஏதுவாகிறது. அந்த மாதிரி நிரந்தரமாக பாதிக்கப்படுபவர்கள் டயாலிசிஸ் எனப்படும் சிகிச்சைக்கு ஆளாக வேண்டி இருக்கிறது அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டி இருக்கிறது. இவை இரண்டுமே செலவு அதிகமாக கூடிய சிகிச்சைகள் மற்றும் சிரமங்கள் நிறைய அனுபவிக்க வேண்டிய வியாதியாக மாறுகிறது. குடும்பத்தினரும் கஷ்டங்களை சேர்த்து அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே, இதுபோன்ற நிரந்தரமான சிறுநீரக கோளாறு ஏற்படாமல் இருப்பதற்கு மக்கள் சிறுநீரக கோளாறு ஏற்படாமல் தங்களை பாதுகாக்க வேண்டியது கட்டாயமாகிறது.
இதற்கு முக்கியமாக மக்கள் சர்க்கரை நோய் வந்தால் அதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. மேலும், தங்களுக்கு எந்த ஒரு சிறு உபாதைகள் ஏற்பட்டாலும் மக்கள் நேரடியாக மருத்துவரையோ, மருத்துவமனைகளையோ அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்வது சிறந்தது. இதற்கு மாறாக மக்களே நேரடியாக மருந்தகங்களுக்கு சென்று ஊசி, மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவது மிகவும் தவறு. இது மாதிரியாக போடப்படும் ஊசி மாத்திரைகளினால் சிறுநீரக கோளாறுகள் அதிகமாக ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே, மக்கள் சிறுநீரக கோளாறு ஏற்படாமல் இருக்கும் வண்ணம் தங்களை பாதுகாத்துக் கொள்ள சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும். மற்ற வியாதிகள் வரும் பொழுது உடனடியாக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற்றுக் கொள்வது அவசியம். சிறுநீரக கோளாறு ஏற்படும் ஆரம்ப காலகட்டத்தில் சிறுநீர் அளவு குறைவதும் கை கால்கள் முகம் ஆகியவை வீங்குவதும் ஆரம்ப அறிகுறிகளாக மக்கள் கண்டறிந்து அதற்கு சிகிச்சை பெற்று நலமுடன் வாழ வேண்டுகிறேன் என தெரிவித்தார்.











kaalaimalar2@gmail.com |
9003770497