Perambalur: Ministers Sivashankar and C.V. Ganesan inaugurated works worth Rs. 24.1133 crore, including a new flyover at Vellar worth Rs. 19.8983 crore!
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதி வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சு.ஆடுதுறை கிராமத்திற்கும், கடலூர் மாவட்டம் பாளையம் கிராமத்திற்கும் இடையே செல்லும் வெள்ளாற்றின் குறுக்கே பொதுமக்களின் நீண்ட நாளைய கோரிக்கையான புதிய மேம்பாலம் ரூ 19 கோடியே 89 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பில் கட்டும் பணியை தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், தொழிலாளர் துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் பெரம்பலூர் கலெக்டர் மிருணாளினி தலைமையில் தொடங்கி வைத்தனர். மேலும், சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ ஒரு கோடியே 16 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் 5 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டும் பணியையும், கிழுமத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ 70.37 லட்சம் மதிப்பில் கூடுதலாக இரு வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டும் பணியையும், புதுவேட்டக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ ஒரு கோடியே 40 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் 5 வகுப்பறையில் கொண்ட கூடுதல் கட்டிடம் கட்டும் பணிகளையும் அடிக்கல் நாட்டி அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். முன்னதாக, அகரம் சீகூர் கிராமத்தில் ரூ. 39.58 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட துணை சுகாதார மையத்தை திறந்து வைத்தும், லப்பைகுடிகாடு வட்டார அளவிலான பொது சுகாதார நிலைய வளாகத்தில் ரூ 54.75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தையும் திறந்து வைத்தார். பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், வேப்பூர் ஒன்றிய திமுக செயலாளர்கள் அழகு நீலமேகம், மதியழகன், ராஜேந்திரன், லப்பைக்குடிகாடு பேரூராட்சி தலைவர் ஜாகீர் உசேன், வேப்பூர் யூனியன் முன்னாள் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட சுகாதார அலுவலர் கீதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) செல்வகுமார், வட்டார மருத்துவ அலுவலர் சேசு, வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேகர், அறிவழகன் குன்னம் தாசில்தார் சின்னத்துரை, ஒப்பந்ததாரர்கள் என்ஜினியர் சிவா @ சிவக்குமார், ஜனாதர்த்தன், எறையூர் சங்கர், கடலூர், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக கட்சி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.