Perambalur: Missing person’s body recovered! Police investigating!
பெரம்பலூர் அருகே உள்ள சித்தளி கிராமத்தை சேர்ந்த ரத்தினம் – முத்தம்மாள் தம்பதியினரின் மகன் செந்தில்குமார் (50). இவருக்கு ருக்மணி என்பவருடன் திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சுமார் ஒரு மாதகாலமாக காணமல் போய்விட்டார். இது இவரது குடும்பத்தினர் மருவத்தூர் போலீசில் புகார் கொடுத்த தேடி வந்த நிலையில், சித்தளி பகுதியில் வயல்வெளி அருகே செந்தில்குமார் சடலமாக கிடப்பது கண்டு, ஊருக்குள் தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செந்தில்குமாரின் சடலத்தை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காப பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.