Perambalur MLA, R. Tamilselvan, was financed by the journalist
பெரம்பலூர் வேப்பந்தட்டையை சேர்ந்த செய்தியாளர் அண்ணாசாமி கடந்த சில ஆண்டுகளாக மாலை நாளேட்டில் ஒன்றில் செய்தியாளராக பணியாற்றி வந்த நிலையில் சிறுநீரகம் பாதிப்பால உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார்.
வேலையின்மையால் சிரமமப்பட்டு வந்த அவருக்கு நடிகர்கள் சரத்குமார் மற்றும் விக்ரம் உள்ளிட்டவர்கள் அவர்கள் மாதமாதம் உதவித்தொகை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் அண்ணாசாமி நிலை அறிந்து பெரம்பலூர் எம்.எல்.ஏ இரா.தமிழ்ச்செல்வன் அவரது சொந்த நிதியை அவருடைய மருத்துவம் உள்ளிட்ட அவரது சொந்த செலவுகளுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கினார். மேலும், உதவிகள் செய்ய ஆறுதல் கூறிய அவர் அண்ணாசாமி விரைவில் நலம் பெற வாழ்த்து தெரிவித்தார்.