Perambalur: Murder in land dispute; Court sentences 4 accused to life imprisonment and fines of Rs. 1000; verdict!

பெரம்பலூர் மாவட்டம், எழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அரசன் மனைவி காளியம்மாள் (50) மற்றும் செல்வராஜ் மனைவி லதா ஆகிய இரு குடும்பத்தினருக்கும் நிலப்பிரச்சனையில் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட சண்டையில் லதா மற்றும் நல்லு மகன் ராஜேந்திரன் (57), ராஜேந்திரன் மகன்கள் அறிவழகன் (28), கார்த்திக் (25) அனைவரும் சேர்ந்து காளியம்மாளின் கணவர் அரசன் என்பவரை கட்டையால் தாக்கியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவனையில் சிகிச்சை பெற்றவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக மங்களமேடு போலீசார் எதிரிகள் மீது கடந்த 2018 ஆம் ஆண்டு Cr.No :357/2018 U/s 147, 148, 294(b), 323, 324, 506 (ii) IPC @ 302, 120(b), 34 IPC. -ன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு 4 பேரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

இவ்வழக்கின் விசாரணை முடித்து குற்ற இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இன்று நீதிமன்ற விசாரணையில் இவ்வழக்கின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் லதா, ராஜேந்திரன், அறிவழகன், கார்த்திக் ஆகிய 4 பேரையும் குற்றவாளிகள் என உறுதி செய்த நீதிமன்றம் U/s 323 IPC -யில் 6 மாதம் சிறை தண்டனை மற்றும் 1,000 ரூபாய் அபராதமும்,U/s 302 IPC-யின் கீழ் ஆயுள்தண்டனை வழங்கியும் மேலும் U/s 147, 148, 294(b), 323, 324, 506 (ii) IPC ஆகிய பிரிவுகளில் விடுதலை செய்தும் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பத்மநாபன் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு எதிரிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்த மங்களமேடு காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற காவலர் ஆகியோரை போலீஸ் எஸ்.பி ஆதர்ஷ் பசேரா வெகுவாக பாராட்டினார்.

Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!