#Perambalur near by Jallikattu staged
annamangalam-jallikattu-20170118
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் கிராமத்தில் இன்று புனித தோமையார் ஆலயத்தில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. அந்த ஊரில் இந்து, முஸ்லீம், கிறித்தவர்கள் என அனைத்து மதத்தினரும் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் வீட்டுக்கு ஒருவர் அரசு ஊழியராக இருந்தாலும், பெரும்பான்மையாக விவசாயமே முக்கிய தொழிலாக செய்கின்றனர். இந்த கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட அரசலூர், விசுவகுடி, முகமதுபட்டினம், பிள்ளையார்பாளையம் ஆகிய பகுதிகளில் இருக்கும் விவாசாயிகள் வேளாண் தொழிலுடன் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்ட்ட தடையை முன்னிட்டு காலைமுதலே அங்கு காவல்துறையினர், வருவாய்துறையினர் முகாமிட்டு ஜல்லிகட்டு நடக்காத வண்ணம் கட்டுப்கோப்பில் வைத்திருந்தனர். ஆனால், இன்று காலை ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க கோரி கிராமத்தில் முக்கிய வீதிகளில்க பேரணி வந்தனர். இன்று புனித தோமையார் பொங்கல் படைத்து முடிக்கப்பட்ட உடன் பொதுமக்கள் போலீசார் கட்டுப்பாட்டையும் மீறி அவ்வூரில் பூஜை செய்யப்பட்ட காளைகள் அனைத்தையும் ஒவ்வொரு முக்கிய வீதிகளில் கட்டவிழ்த்து விட்டனர். அந்த தெருக்களில் தயாராக இருந்த மாடுபிடி வீரர்கள், இளைஞர்கள் காளைகள் அடக்க முயன்றனர். சீறிப் பாய்ந்த காளைகள் இளைஞர்களின் கைகளில் சிக்காமல் தெருக்களை கடந்து சென்றன. தெருவிற்கு தெரு ஜல்லிகட்டு காளைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதால் கலங்கிய காவல் துறையினர் காளைகள் இருக்கும் பகுதிகளுக்கு சென்று காளை முற்றுகையிட்டு காளைகளை கட்டவிழ்த்துவிடுவதை தடுத்து நிறுத்தினர். இதனால் கிராமமே ஒரே பரபரப்பாகவும், உற்சாகமாகவும் இருந்தனர். பொதுமக்களை தேடி போலீசாரும், போலீசாரை போக்கு காட்டி பொதுமக்கள் நடத்திய ஜல்லிக்கட்டால் இளைஞர்கள் ஒரே கோஷமிட்டப்படி வீதிகள் எங்கும் வலம் வந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!