Perambalur near Confiscation of carts carried by sand

பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிக்காட்டில் மணல் கடத்திய 20 மாட்டு வண்டிகளை குன்னம் தாசில்தார் நேற்று இரவு பறிமுதல் செய்ததாக தெரிகிறது.

லப்பைக்குடிக்காடு வெள்ளாற்றங்கரையில் அரசு அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக குன்னம் தாசில்தாருக்கு கிடைத்த தகவலின் பேரில் குன்னம் தாசில்தார் தமிழரசன், வருவாய் ஆய்வாளர் சிலம்பரசன், லெப்பைக்குடிக்காடு கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கொண்ட குழுவினர் வெள்ளாற்றங்கரைக்கு சென்று பார்த்த போது பென்னக்கோணம், முருக்கன்குடி, நமையூர் பகுதிகளைச் சேர்ந்த 20 மாட்டு வண்டிகள் மணல் எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து 20 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்த தாசில்தார் வழக்கு பதிய பெரம்பலூர் கோட்டாச்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!