perambalur near did not provide basic facilities for people besieged the The minister car he thought was a car collector kero

பெரம்பலூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தராததால் அமைச்சர் விஜயபாஸ்கர் கார் என நினைத்து ஆட்சியர் காரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியம் கை.களத்தூரில் இன்று ஆரம்ப சுகாதார நிலைய திறப்பு விழாவிற்கு இன்று மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வருகை தந்தார். அப்போது ஊருக்குள் நுழைந்த போது அமைச்சர் கார் என நினைத்த மக்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் காரை மறித்து தங்கள் கிராமத்தில் சாலை வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட சுகாதார வசதிகள் வேண்டி பல முறை மனு கொடுத்தும் மாவட்ட ஆட்சியர் முதல் அனைத்து தரப்பு அதிகாரிகளும் அலட்சியம் செய்து வருகின்றனர். மேலும், பெரும்பாலான தெருக்களில் சாக்கடை நீர் வழிந்தோடுவதாகவும், இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் காய்ச்சல், சளி மற்றும் கொசுக்கடியால் அல்லல்படுவதாகவும் தெரிவித்த அவர்கள் இன்று அவ்வழியே வந்த காரை அமைச்சருடையது என நினைத்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் நந்தக்குமார் காரை மறித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார், கட்சியினர், பொதுமக்களை அப்புறப்படுத்தினர். அமைச்சர் விழாவிற்கு வாருங்கள் என அழைத்து சென்றனர். ஆனால், அதுகுறித்து கடைசி வரை எதுவும் பேசப்படவில்லை. வாக்களித்த எம்.எல்ஏ, எம்.பிக்கள், மக்கள் வரிப்பணத்தை சம்பளதாக வாங்கும் ஆட்சியர் முதல் அதிகாரிகள் வரை எவரும் கடைசி வரை கண்டு கொள்ளாமல் மக்களை தவிக்கவிட்டு சென்றது அபபகுதிமக்களை வேதனையில் ஆழத்தியது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!