Perambalur near poisoned, killed 15 pigs at the case against filed
பெரம்பலூர் அருகே 15 பன்றிகளுக்கு விஷம் கொன்றவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் அருகே உள்ள வாலிகண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு , சரோஜா தம்பதியினர், பரம்பரை தொழிலான பன்றி வளர்க்கும் தொழிலை செய்து ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றிரவு வழக்கம் போல் பன்றிகளுக்கு உணவளித்து விட்டு இன்று காலை வந்து பார்க்கும் பட்டி திறந்து கிடத்ததுடன், 15 பன்றிகளும் விஷம் கொல்லப்பட்டு குறித்து அதிர்ச்சி அடைந்த அவர் மங்களமேடு காவல் நிலையத்திலும், விலங்குகள் வதை தடுப்பு சங்கத்திலும், புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து மங்கலமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கால்நடைத்துறையினர் இறந்து போன பன்றிகளை வைத்து உடற்கூறாய்வு நடத்தி வருகின்றனர். இறந்த பன்றிகளின் மதிப்பு சுமார் 1.5 லட்சம் இருக்குமென கூறப்படுகிறது.