perambalur near the dubious police handed him over to the public.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், ஆய்குடி கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வயல்ப் பகுதியில் சுற்றி திரிந்தவரை பிடித்து பொது மக்கள் மங்களமேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஆய்குடி கிராமத்தை சேர்ந்தவர் அருள்பிரகாசம் (வயது 50), விவசாயி. இன்று காலை வழக்கம் போல் தனது வயலுக்கு சென்றார். அப்போது அங்கு அவரது வயலில் சுமார் 65 வயதுமதிக்கதக்க ஒரு முதியவர் குச்சிகளை ஒன்றாக சேர்த்து தீயிட்டு கொளுத்தி உள்ளார். அவரிடம் யார் என விளக்கம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர்
முன்னுக்குபின் முரணாக பதிலிளித்துள்ளார். இதில், சந்தேகமடைந்த அருள்பிரகாசம் ஊர் பொது மக்களிடம் அழைத்து வந்துள்ளார்.
கடந்த ஒரு மாதம் காலமாக அந்தப் பகுதிகளில் கிணற்று மின் மோட்டார்களில் உள்ள மின் ஒயர்கள் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர் அசூர், ஆய்குடி, எழுமுர், உட்பட பல கிராமங்களில் இதனால் இவரும் மின் ஒயர்கள் திருட வந்திருக்கலாம் என்று சந்தேகித்து உடனே மங்களமேடு போலீசிக் கு தகவல் தெரிவித்ததன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த முதியவரை அங்கிருந்து மீட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர், முதியவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த முதியவர் விழுப்புரம் மாவட்டம் கடயம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் கனியன் பாய் (68) என்பதும் அவர் சற்று மன நலம் பாதிக்கபட்டவர் என்பதும் தனது மனைவியை கடந்த 10 வருடங்களாக பிரிந்து இப்படி ஊர் சுற்றி திறிகிறார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
போலீசார், அவரது உறவினர்களை வரவழைத்து அவரை ஒப்படைத்தனர் காட்டு பகுதியில் குச்சிகளை போட்டு தீயிட்டு இருந்தவரை பிடித்து திருடன் என்று போலீசில் ஒப்படைத்த சம்பவம் அந்த பகுதியில் காலை நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.