பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்தில் சாத்தனூர் ஊராட்சிக்கு உட்பட்ட குடிக்காடு பகுதி மக்கள் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் காற்று வாங்கியில் கசியும் நீரை பிடித்து பருகி வருகின்றனர்.
சாத்தூனூர் கிராமத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு குடிநீர் பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் இறந்து மிதந்தள்ளது. இதனால் ஊராட்சி நிர்வாகம் குடிநீரை வினியோகத் நிறுத்தி வைத்துள்ளது. பத்து நாட்களுக்கு முன்பாக ஒரு முறை மட்டும் லாரியில் தண்ணீர் விநியோகம் செய்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பல முறை தகவல் தெரிவித்தும் முறையான குடிநீர் கிடைக்காததால் அப்பகுதி பெண்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். தண்ணீருக்காக சுமார் 2 கிரோமீட்டர் தூரம் நடத்து சென்று சுமந்த வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், குடிநீரக்காக குடுமிபிடி சண்டையும் அப்பகுதியில் அடிக்கடி நடப்பதாக தெரிவிக்கின்றனர்.
இதனால் அங்கு வசிக்கும் தலித் மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் தட்டுப்பாட்டுடன் அன்றாடம் சமையல் பிரச்சனைகளை சமாளிப்பதாக தெரிவித்தனர்.
மேலும் அந்த ஊர் வழியாக தெற்கு மாதவிக்கு செல்லும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் பொருத்தப்பட்டிருந்த காற்று வாங்கியில் கசியும் நீரையே பருகி வருகின்றனர். தற்போது அந்த குழாயும் உடைந்து பெயர்ந்து விட்டதால், மண்ணோடு மண்ணாக வெளியேறும் தண்ணீரையே மக்கள் பாத்திரங்களில் முகர்ந்து குடங்களில் நிரப்பபி எடுத்து சென்று வருகின்றனர்.
இந்த சுகாதார மற்ற குடிநீர் மூலம், காலரா போன்ற தொற்று நோய்களும், அப்பகுதியில் இருந்து பிற ஊர்க்கு செல்லும் காவிரி குடிநீரில் மாசுகள் கலப்பதற்கு அதிக வாயப்புள்ளது என்பது குறிப்பிடதக்கது.