Perambalur: New beneficiaries can apply for the Chief Minister’s Girl Child Protection Scheme; Collector informs!

Model
பெரம்பலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் 2 பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் புதிய பயனாளர்கள் விண்ணப்பிக்க இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், சாதிசான்றிதழ், தாயாரின் வயதுச்சான்றிதழ், ஆண்குழந்தை இன்மை என்பதற்கான சான்றிதழ், தாயாரின் அறுவை சிகிச்சை (குடும்ப கட்டுப்பாடு) சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, குடும்ப புகைப்படம், இரண்டு குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் ஆகிய சான்றிதழ்களுடன் இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,20,000/-த்திற்கு மிகாமல் இருக்க வேண்டும், தாயார் 40 வயதிற்குள் இருக்க வேண்டும், பெற்றோர்களில் ஒருவர் 40 வயதிற்குள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும், குடும்பத்தில் ஒன்று (1) அல்லது இரண்டு (2) பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும், இரண்டாவது பெண் குழந்தைக்கு 3 வயதிற்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்த மேலும் தகவல்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் ச.அருண்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.