Perambalur: New bridge worth Rs. 48.79 lakhs; Minister Sivasankar inaugurated!
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஆதனூர் ஊராட்சியில் ரூ.48.79 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சிறு பாலத்திற்கான பணியை தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
ஆதனூர் முதல் மருவத்தூர் செல்ல பாலம் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஆதனூர் ஊராட்சியில் மருவத்தூர் சாலை உப்பு ஓடையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வைலை உறுதியளிப்புத் திட்டத்தில் ரூ.48.79 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் அமைக்கும் பணி இன்று காலை தொடங்கி வைக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ ஜெகதீசன், ஆலத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி, வேப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சி.ராஜேந்திரன் முன்னாள் ஊராட்சி தலைவர்கள் கொளக்காநத்தம் என்.ராகவன், அயனாபுரம் பாலமுரகன், இலந்தங்குழி அகிலா ராமசாமி, உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.